clean-5

Wisata

ஆன்மிகம்

ஜோதிடம்

Kerajaan

kota

Suku

பேஸ்புக் உபயோகிக்கும் பெண்களே அதிர்ச்சிகர தகவல்!.

சமூக விரோத கும்பல்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி இளம்பெண்களை ஈர்த்து அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவதாக யூரோபோல் தெரிவித்துள்ளது. சமூக விரோத கும்பல்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை ஈர்த்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக ஐரோப்பா போலீஸ் ஏஜென்சியான யூரோபோலின் தலைவர் ராப் வெய்ன்ரைட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்கள் அவர்களை ஈர்க்க குழந்தைகளை பார்த்துக் கொள்ள, வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்பது போன்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கிறார்கள். விளம்பரங்களை பார்த்து தொடர்புகொள்ளும் பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிவிடுகிறார்கள். அந்த பெண்கள் தாங்கள் விற்ற விபச்சார விடுதியில் தான் இருக்கிறார்கள் என்பதை வெப்சாட் மற்றும் வெப்கேம்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளுவதன் மூலம் சமூக விரோத கும்பல்களுக்கு ஆண்டுக்கு 150 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைக்கிறது.சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சியால் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்றார்......!

டிசம்பர் 12-ல் தமிழ், தெலுங்கு, இந்தியில் 5000 திரையரங்குகளில் லிங்கா

சென்னை: ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி லிங்கா படம் 5000 அரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இன்று அறிவித்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள லிங்கா படம் நேற்று சென்சார் ஆனது. 3 மணி நேரப் படமான லிங்காவுக்கு, எந்த வெட்டுமில்லாமல் க்ளீன் யு சான்று அளித்துள்ளனர். ரிலீசுக்கு இன்றும் 17 நாட்கள் உள்ள நிலையில், லிங்கா படம் சென்சார் சான்றிதழ் பெற்றது திரையுலகில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், திட்டமிட்டு ஒவ்வொரு பணியையும் முடித்து வருவதற்காக லிங்கா குழுவுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். படத்துக்கு கேளிக்கை வரி விலக்குப் முன்கூட்டி தணிக்கை பெற்றுள்ளது பெரிதும் உதவியாக இருக்கும் என்று திரை வர்த்தகத் துறை நம்புகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறுகையில், "ரூ 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் லிங்கா. ரசிகர்கள் உணர்வுப் பூர்வமாக ரசிக்கும் படமாக வந்திருக்கிறது. லிங்காவை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகெங்கும் 5000 அரங்குகளில் வெளியிடவிருக்கிறோம். சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் லிங்காவை பார்த்து மகிழலாம்," என்றார்.

அனுஷ்காவிற்கு கடும் சவால் கொடுத்த கேத்ரினா!

மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கேத்ரினா. இவர் அனுஷ்கா நடித்து வரும் ருத்ரமாதேவி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இருவரும் சேர்ந்து நடனமாடுவது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறதாம். இதில் இருவருக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் நிஜமாகவே போட்டி ஆரம்பித்து விட்டதாம்.அனுஷ்கா ஒவ்வொரு மூமண்டிற்கும் தான் நன்றாக ஆடியிருக்கேனா? என்று கேட்டு மானிட்டரை பார்த்த பின் தான் அடுத்த காட்சிக்கு செல்வாராம். அந்த அளவிற்கு கேத்ரினா நடனத்தில் கடும் சவால் கொடுத்தாராம்.

அஜீத்துடன் மோதப்போகிறார் விக்ரம்!

கடந்த தீபாவளிககு வரும் என்ற எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விஜய்யின் கத்தியும், விஷாலின் பூஜையும் மடடுமே திரைக்கு வந்தன. ஆனால், அஜீத்தின் என்னை அறிந்தால், விக்ரமின் ஐ என பட்டியலில இருந்த மற்ற படங்களின் படப்பிடிபபுகள் முடியாததால் பின்வாங்கின. ஆனால் இப்போது அந்த படங்களில் அஜீத்தின் என்னை அறிந்தால் வருகிற பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகி விட்டது.

அதேபோல், தீபாவளிக்கு பூஜை படத்தை வெளியிட்ட விஷால், பொங்கலுக்கு ஆம்பள படத்தை வெளியிடப்போவதாகவும் முன்பே அறிவித்து படப்பிடிப்பை முடுக்கி விட்டிருக்கிறார். ஆனால் சொன்னபடி விஷால் நடநது கொள்வார் என்பதால், அவர் படமும் இந்த பொங்கல் தினத்தில் வெளியாகும் படப்பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

மேலும், போன தீபாவளிக்கு அஜீத் படத்தைப்போலவே பின்வாங்கிய விக்ரமின் ஐ இந்த பொங்கலுக்கு திரைக்கு வருவது கிட்டத்த்ட்ட உறுதியாகி விட்டது என்கிறார்கள். காரணம், படப்பிடிபபு எப்போதோ முடிந்து விட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. முக்கியமாக, இந்த படம் ஏ.ஆர்.ரகுமானினால்தான் தாமதமாகும் என்று கருதப்பட்டுவந்த நிலையில், இப்போது அவர், தனது ஹாலிவுட் பட வேலைகளை தள்ளி வைத்து விட்டு, ரஜினியின் லிங்கா, ஐ என இரண்டு படத்திற்கும் பின்னணி இசையமைப்பதில் தீவிரமடைந்திருக்கிறார்.

ஆக, யாரால் தாமதமாகும் என்ற கருதப்பட்டதோ அந்த ரகுமானே தற்போது பின்னணி இசைக்கோர்ப்பில் இறங்கி விட்டதால், ஐ படத்தை கட்டாயம் பொங்கலுககு எதிர்பார்க்கலாம் என்கிறர்கள. விளைவு, இந்த பொங்கல் கோதாவில் அஜீத், விக்ரம் இருவருக்குமிடையேதான் பலத்த போட்டி இருக்கும் என்று தெரிகிறது.

மனைவி பிரசவ வேதனையை கணவரும் உணர முடியும்: ஆய்வில் தகவல்

பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கவலைப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துயரை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மகப்பேறு ஆஸ்பத்திரியில் செயற்கை முறையில் பிரசவ வேதனை நிகழ்ச்சி வாரத்திற்கு 2 முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி போலியான உறை ஒன்று ஆண்களின் அடிவயிற்றில் கட்டப்படுகிறது. அதன் வழியாக வயிற்று பகுதியில் ‘எலெக்ட்ரிக் ஷாக்’ கொடுக்கப்படுகிறது. தொடக்கத்தில் குறைவாக கொடுக்கப்படும் அந்த ஷாக் நேரம் செல்ல செல்ல அதிகப்படுத்தப்படுகிறது. அது உடலில் பிரசவ வேதனை போன்ற வலியை ஏற்படுத்தி உணர செய்கிறது. இந்த சோதனையில் ஈடுபட 100 ஆண்கள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

cinema