clean-5

Wisata

ஆன்மிகம்

ஜோதிடம்

Kerajaan

kota

Suku

பெண் கல்லால் அடித்து கொலை! 4 ஆண்களை மணந்ததால் விபரீத தண்டனை! வீடியோ

பெண் கல்லால் அடித்து கொலை! 4 ஆண்களை மணந்ததால் விபரீத தண்டனை!

லிங்கா, என்னை அறிந்தால்” - அனுஷ்காவுக்கு ஏமாற்றமா...?

இந்தியத் திரையுலகமே இதுவரை கண்டிருக்காத அளவிற்குத் தயாராகி வரும் இரண்டு பிரம்மாண்டமான தெலுங்குப் படங்களான “ருத்ரமா தேவி, பாகுபலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அந்த இரண்டு படங்களில் அவருடைய நடிப்பு, தோற்றம், அழகு, திறமை ஆகியவற்றைப் பற்றி சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குனர்கள், நடிக, நடிகையர் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். இரண்டு சரித்திரப் படங்களிலும் அனுஷ்கா அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரங்களுடன் பொருந்திப் போயிருக்கிறார் என்று அவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்தியத் திரையுலகத்தின் பெருமையைச் சொல்லும் அந்த இரண்டு படங்களுமே அனுஷ்காவிற்கு பெயரையும், புகழையும் வாங்கித் தரும் என்று சொல்கிறார்கள். ஆனால், தமிழில் அனுஷ்கா நடித்துள்ள லிங்கா, என்னை அறிந்தால் ஆகிய இரண்டு படங்களிலும் அவருடைய முக்கியத்துவத்தைக் குறைத்து விட்டார்கள் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லிங்கா படத்தைப் பார்த்தவர்கள் படத்தில் அவரை விட சோனாக்ஷி சின்ஹாவிற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். லிங்கா படப்பிடிப்பின் போதே அனுஷ்காவிற்கும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் சண்டை என்றெல்லாம் செய்திகள் வெளிவந்ததை அவர்கள் நினைவு கூறுகிறார்கள். அதே போல, அஜித் ஜோடியாக அனுஷ்கா நடித்து வரும் என்னை அறிந்தால் படத்தில் முதலில் ஒரு சிறிய கௌரவத் தோற்றத்தில்தான் த்ரிஷா நடிக்க ஒப்பந்தமானாராம். அதன் பின் இயக்குனர் கௌதம் மேனனிடம் தன்னுடைய கதாபாத்திரத்தைக் கொஞ்சம் அதிகமாக்கும்படி த்ரிஷா கேட்க, அவரும் அதற்கு சம்மதித்து த்ரிஷாவிற்கு முக்கியத்துவமுள்ள பல காட்சிகளைச் சேர்த்தாராம். தற்போது த்ரிஷா நடனமாடும் சோலோ பாடல் படமாவது வரை அவர் கதாபாத்திரம் அதிகமாக்கப்பட்டுவிட்டதாம். இந்தப் படத்திலும் அனுஷ்காவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சும் என்கிறார்கள். இந்த இரண்டு படங்கள் அனுஷ்காவைக் கைவிட்டாலும், “ருத்ரமாதேவி, பாகுபலி” படங்களில் அவரது நடிப்பை நெருங்கக் கூட வேறு யாராலும் முடியாது என அனுஷ்காவின் ரசிகர்கள் சொல்கிறார்கள்.

எம்ஜிஆர், அஜீத்தாக மாறும் சிம்பு

இரண்டு வருடங்களுக்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘வாலு’. ஹன்சிகா , சந்தானம் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் சந்தர். படத்திற்கு இசை தமன். சிம்பு படத்தில் அவரது அப்பா டி.ஆர். பாடிய பாடல்கள் என்றாலே பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகும். ’வல்லவன்’ எம்மாடி ஆத்தாடி, ‘ஒஸ்தி’ கலாசலா பாடல் என இவ்விரு பாடல்களும் இப்போதும் பல சேனல்களின் குத்துப்பாட்டு லிஸ்ட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதே பாணியில் தற்போது வெளியாக உள்ள ‘வாலு’ படத்திலும் ‘தாரு மாறு வாத்தியாரு’ என்ற பாடல் உருவாகி வருகிறது. இந்தப் பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் , சிம்பு என 4 கெட்டப்களில் சிம்பு வித்தியாசமாக டான்ஸ் ஆடி இருக்கிறாராம்.

சிம்புவிடம் மோதும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். ஆனால், இவர் நடித்த சில படங்களிலேயே சிம்பு, ஆர்யா, ஜீவா என அனைவரையும் ஓரங்கட்டிவிட்டார்.தற்போது தன் நடிப்பில் வெளிவரவிருக்கும் காக்கிசட்டை படத்தை டிசம்பர்-25ம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளனர். அன்றைய தினத்திலேயே சிம்பு நடித்த வாலு திரைப்படமும் வரவிருக்கிறது.அதனால், சிவகார்த்திகேயன் முதன் முறையாக பெரிய நடிகர் ஒருவருடன் போட்டி போட உள்ளார். வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

cinema